Friday, 1 February 2019

உங்களுடைய மொபைலில் இருந்து நேரடியாக டேட்டாக்களை பேக்கப் எடுப்பது சுலபம்

செயலியின் அளவு        

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுக்கு தேவையான போட்டோ அல்லது வீடியோ அல்லது மியூசிக் மற்றும் டாக்குமெண்ட்ஸ் இதுபோன்ற டேட்டாக்களை பாதுகாப்பாக ஸ்டோர் செய்ய வேண்டுமென்றால் நிச்சயம் உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. 100 GB Free - Degoo Cloud Drive என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Degoo Backup AB - Cloud என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 30 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்களுடைய மொபைலில் இருந்து நேரடியாக உங்களுக்கு தேவையான டேட்டாக்களை பேக்கப் எடுப்பது ஈஸி. நீங்கள் எதை பேக்கப் எடுக்க நினைக்கிறீர்களோ அதாவது போட்டோ, வீடியோ, மியூசிக் மற்றும் இதர டாக்குமெண்ட்ஸ் இவை அனைத்தையும் இந்த அப்ளிகேஷன் பேக்அப் எடுத்துக் கொள்கிறது. அதுவும் உங்களுக்கு தேவையான இடத்தில் சேவ் செய்து கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீங்கள் பேக்கப் எடுத்த டேட்டாவை நீங்கள் சுலபமாக ஷேர் செய்து கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷன் 100 ஜிபி வரையும் ஸ்டோர் செய்து கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷன் உடைய சிறப்பம்சம் மற்ற அப்ளிகேஷனை போல் இல்லாமல் அந்த டேட்டாவின் அளவு எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதிவேகமாக பேக்கப் மற்றும் ஸ்டோர் ஆகிவிடும். மற்ற அப்ளிகேஷனில் உதாரணமாக 10 ஜிபி அல்லது 20 ஜிபி இதுபோன்ற டேட்டாக்களை ஒரு டிவைஸ் இல் பேக்கப் எடுப்பது என்பது மிகவும் கடினம். அந்த தொல்லை இந்த அப்ளிகேஷனில் இல்லை. மேலும் இந்த அப்ளிகேஷனின் ஆப்ஷன்கள் கண்ட்ரோல் செய்வதற்கும் ஆபரேட் செய்வதற்கும் சுலபமாக இருக்கிறது. இந்த அப்ளிகேஷனில் நீங்கள் 100 ஜிபி வரைக்கும் டேட்டாக்களை பேக்கப் மற்றும் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் நீங்கள் பேக்கப் அல்லது ஸ்டோர் செய்து வைத்த டாகுமெண்ட் அல்லது பைலை மறந்து விட்டீர்கள் என்றால் அந்த பைலை நீங்கள் எத்தனை ஆண்டுகள் கழித்தும் எடுத்துக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

   நீங்கள் மறந்த அல்லது எப்போது பேக்கப் மற்றும் ஸ்டோர் செய்து வைத்த பைலை தெரியாமல் இருந்தீர்கள் என்றால் அந்த பைலை தேடிக் கண்டுபிடிப்பதற்கு இந்த அப்ளிகேஷன் பெரிதும் உதவுகிறது.இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment

Related Post