Thursday, 29 November 2018

அழிந்த போட்டோ மற்றும் வீடியோவை திரும்ப பெறுவது எப்படி

சாஃப்ட்வேர் இன் அளவு

     நாம் தெரியாமல் டெலிட் செய்த போட்டோ மற்றும் வீடியோவை திரும்ப பெறுவதற்கு இந்த சாப்ட்வேர் தேவைப்படுகிறது. Recoveryit என்று சொல்லக்கூடிய இந்த சாப்ட்வேர்யை  Wondershare  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த சாப்ட்வேர்  86  எம்பி கொண்ட இந்த சாப்ட்வேர் இதுவரை 5,00,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர் இந்த சாப்ட்வேர் தற்போது 100 எம்பி நாம் இலவசமாக ரெக்கவர் செய்துகொள்ள முடியும். அதற்குமேல் ரெக்கவர் செய்வதற்கு நீங்கள் இந்த சாப்ட்வேரில் பணம் கொடுத்து முழுமையாக வாங்க வேண்டும். மேலும் இந்த சாப்ட்வேரை பற்றின முழு தகவல்களையும் நாம் தொடர்ந்து பார்க்கலாம்.

பயன்படுத்துவது எப்படி

    தெரியாமல் அழிந்து போன போட்டோ, வீடியோ மற்றும் எந்தவிதமான டாக் மண்டையும் மிக சுலபமாக திரும்ப பெறுவதற்கு இந்த சாஃப்ட்வேர் தேவைப்படுகிறது. இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி டாக்குமெண்ட், வீடியோ, ஆடியோ, ஈமெயில் உட்பட அனைத்துவிதமான பைல்களையும் நம்மால் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் நீங்கள் ரீசைக்கிள் பின்னில் இருக்கக்கூடிய டேட்டாவையும் டெலிட் செய்து இருந்தால் அதையும் நம்மால் ரெக்கவர் செய்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி வைரஸ் அட்டாக் செய்த டேட்டாவையும் நம்மால் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். அதேபோல் நம்முடைய டிஸ்க்கை பார்மட் செய்தாலும் அதையும் இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி திரும்ப எடுத்துக்கொள்ளலாம். அதாவது எந்தவிதத்திலும் நம்முடைய டேட்டாக்கள் அறிந்திருந்தாலும் இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி நம்மால் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். அது ஹார்ட் ட்ரைவ், மெமரி கார்டு, யூஎஸ்பி drive, pen drive என எதுவாக இருந்தாலும் சரி. இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்ய

    தெரியாமல் டெலிட் ஆன அனைத்து பைல்களையும் திரும்ப பெறுவதற்கு இந்த சாஃப்ட்வேர் தேவைப்படுகிறது. இந்த சாஃப்ட்வேர் டவுன்லோட் லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த லிங்கை பயன்படுத்தி கூட நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




முழு விபரங்கள் பெற

    மேலும் இந்த சாஃப்ட்வேரை எப்படி பயன்படுத்துவது இந்த சாஃப்ட்வேர் எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றிய முழு விபரங்களையும் நாங்கள் ஒரு வீடியோ வடிவில் தெரிவித்துள்ளோம் அந்த வீடியோவை கீழே கொடுத்துள்ளோம் உங்களுக்கு தேவை என்றால் அந்த வீடியோவை பார்த்து இந்த சாஃப்ட்வேரை எப்படி பயன்படுத்துவது என்ற முழு விபரங்களையும் தெரிந்துகொள்ளலாம்


உங்கள் ஆதரவு தேவை

    இதுபோல சிறந்த சாஃப்ட்வேர் மற்றும் கணினி சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்திலும், யூடியூப் சேனலிலும் கிடைக்கும். ஆகையால் எங்கள் youtube சேனலையும் சப்ஸ்கிரைப் செய்து பயன்பெறவும். நன்றி.

1 comment:

Related Post