அனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்

Tuesday, 10 April 2018

உங்க மொபைலில் சார்ஜ் நிக்க மாட்டிகிறதா? அப்போ இந்த 7 ஆலோசனை உங்களுக்கு தான்


 நம் மொபைலில் சார்ஜ் நிக்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவை என்னென்ன காரணங்கள் அதை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம். காரணங்கள் கீழை
  1. பாட்டரி பாதுகாப்பு செயலி & அண்டி வைரஸ் செயலி 
  2. குறைவாக பயன்படுத்தப்படும் செயலிகள் 
  3. default செயலிகள் 
  4. அதிக MB கொண்ட செயலிகள் 
  5. Wallpaper 
  6. GPS , BT, இன்னும் பல 
  7. இன்டர்நெட் பயன்படுத்துவது

பாட்டரி பாதுகாப்பு செயலி & அண்டி வைரஸ் செயலி 

    நமது மொபிலில் நாம் பாட்டரியை பாதுகாப்பதுர்க்காகவும், வைரஸ் வந்து விடுமோ என்ற பயதினாளையும் நாம் பேட்டரி சேவர் மற்றும் அண்டி வைரஸ் ஆப் களை பயன்படுத்திகொண்டு இருக்கிறோம். ஆனால் அவைகளில் நமக்கு ஒரு பயனும் இல்லை என்பதும், அதே சமயத்தில் அவைகள் நம் மொபைலில் இருப்பதால் நம் மொபிலில் சார்ஜ் இறங்கி விடும் என்பதும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியுமோ என்று தெரியவில்லை. ஆகையால் நீங்கள் இந்த இரண்டு செயலியையும் உங்கள் மொபைலில் நிறுவி இருந்தால் அதை uninstall  செய்யவும்.

குறைவாக பயன்படுத்தப்படும் செயலிகள்

    நீங்கள் ஒரு சில செயலிகளை குறைவாக பயன்படுத்துவீர்கள். உதாரனத்திற்க்கு  நாம் அமேசான், ப்ளிப்கர்ட்,Ebay போன்ற செயளிகளெல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்த போவதில்லை,  ஆகையால் அந்த செயலிகளை uninstall செய்வதும் நல்லதே. தேவை படும் பொது பயன்படுதிகொள்ளவும்.

Default செயலிகள்

    நம் மொபிளுடன் கூடவே வந்த செயலிகளை uninstall செய்வது கடினம். ஆகையால் uninstall செய்ய முடியாத ஆப் களை FORCE STOP செய்து நிறுத்தி வைக்கவும். இதன் மூலம் அந்த செயலிகள் backround செயல்படுவதில் இருந்து தவிர்க்கலாம்.

அதிக MB கொண்ட செயலிகள்

    அதிக MB கொண்ட செயலிகள் நம் மொபைலில் இருப்பதால் RAM அதிகம் தேவைப்படும். நம் மொபைல் மெதுவாக இயங்க வாய்புகள் அதிகம். ஆகையால் அதிக MB கொண்ட செயலிக்கு பதிலாக குறைந்த MB கொண்ட செயலியை பயன்படுத்துவது மிகவும் நல்லது. உதாரனத்திற்க்கு FACEBOOK பயன்படுத்துவதற்கு பதில் FACEBOOK LITE பயன்படுத்துவது மிகவும் நல்லது.

Wallpaper 

    நம்முடைய மொபிலில் நாம் WALLPAPER களை அழகாக வைப்பதை நாம் விரும்புவோம். அனால் அந்த WALLPAPER களிலும் நமது சார்ஜ் குறைவது உங்களுக்கு தெரியுமா? ஆம் , ஆகையால் உங்கள் Wallpaper ரில் முடிந்தவரை வெள்ளை நிறம் குறைவாகவும், கருப்பு நிறம் அதிகமாகவுயம் இருப்பது போல் பாற்றுகொள்ளவும்.

GPS,BT இன்னும் பல 

    நம்முடைய மொபைலில் GPS,BT, உள்பட தேவை இல்லாமல் நாம் அவைகளை ON செய்து வைத்திருப்போம். அவைகள் ON னில் இருந்தால் நம் மொபிளின் சார்ஜ் குறைய அதிக வாய்புகள் உள்ளது. ஆகையால் அதை Off செய்து வைப்பது மிகவும் நல்லது.

இன்டர்நெட் பயன்படுத்துவது

    நாம் அதிகம் இணையதளம் பயன்படுத்துபவர்களாக இருக்கிறோம். ஆகையால் நம்முடைய மொபிலில் DATA On லையே விட்டு விடுவோம். அதன் முலம் நமது மொபைலில் சார்ஜ் அதிகம் குறையும். ஆகையால் நமக்கு எப்போது தேவை படுகிரோதோ அப்போது மட்டும் DATA வை ON செய்வது மிகவும் நல்லது.

 

    இன்னும் பல விபரங்கள் நீங்கள் தெரிந்து கொள்வதற்கு மேலை உள்ள வீடியோவை பார்க்கவும். இதுபோல இன்னும் பல பயனுள்ள கட்டுரைகளுக்கு உங்கள் ஆதரை தாருங்கள். நன்றி

No comments:

Post a Comment